Saturday 14 June 2014

ஹாய் நண்பர்களே, நான் இந்த வலை உலகத்துக்கு புதிய முகம்.என் பக்கமும் வந்து பார்த்து, கருத்துக்களைப்பகிர்ந்துகொள்ளவும். நன்றி.

10 comments:

  1. வலையுலகில் புதுமுக வருகைக்கு என் அன்பான நல்வாழ்த்துகள்.

    ’சரணாகதி’ என்ற தலைப்பும் அருமை ;)

    WORD VERIFICATION என்ற நந்தியை முதல் வேலையாக நீக்கி விடுங்கள். அது இருந்தால் பின்னூட்டமிட வரும் என்னைப் போன்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடும்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  2. அன்பான, வேகமான வருகைக்கு நன்றி. word verification எப்படி நீக்கணும்னு சொலித்தரமுடியுமா. ஏதோ ஒரு ஆர்வத்துல வலைப்பூ ஆரம்பித்து விட்டேன் அதில் இருக்கும் நெளிவு, சுளிவுகள் பற்றி ஏதுமே தெரியல்லே, புரியல்லே. முதல் ஆளா நீங்க வந்து கருத்துச்சொல்லி என்னை உற்ஸாகப்படுத்தி இருக்கீங்க.எப்ப என்ன மிஸ்டேக் பண்ணுரேனோ வந்து சொல்லிக்கொடுங்க. நன்றி.

    ReplyDelete
  3. sreevadsan 26 June 2014 23:28

    //அன்பான, வேகமான வருகைக்கு நன்றி.//

    தங்களின் நன்றிக்கு நன்றிகள்.

    //word verification எப்படி நீக்கணும்னு சொலித்தரமுடியுமா.//

    WORD VERIFICATION என்பதை எப்படி நீக்க வேண்டும் என்பது பற்றி எனக்கும் இப்போது நினைவில் இல்லை. வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள்.

    // ஏதோ ஒரு ஆர்வத்துல வலைப்பூ ஆரம்பித்து விட்டேன் அதில் இருக்கும் நெளிவு, சுளிவுகள் பற்றி ஏதுமே தெரியல்லே, புரியல்லே.//

    எல்லோருமே இதுபோலவே ஏதோ ஒரு ஆர்வத்திலே வலைப்பூ
    ஆரம்பித்துள்ளவர்கள் மட்டுமே. ஆனால் வலையுலகில் நல்ல
    முறையில், பலரும் விரும்பும்படி நீடிக்க வேண்டுமானால்
    தாங்கள், தங்களுக்குள் சில கொள்கைகளை வைத்துக்கொள்ள
    வேண்டும்.

    1] ஆபாசத்தலைப்புகளோ, ஆபாசப்படங்களோ, ஆபாசச் செய்திகளோ இல்லாமல் மிகத்தரமாக எழுதக்கூடிய ஒருசில எழுத்தாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவர்களின் பதிவுகள் பக்கம் மட்டுமே போய், அவற்றை முழுவதுமாகப் படித்தபின், தாங்கள் விதயாசமான முறையில் அவர்களுக்குத் தங்கள் கருத்தினைச் சொல்லிப் பாராட்ட வேண்டும். தவறுகளையும் மென்மையாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    2] தாங்களும் நான் மேலே சொன்ன அதுபோலவே தரமான
    விஷயங்களை மட்டுமே படிக்க சுவாரஸ்யமான முறையில்,
    சுவையாக தங்கள் பதிவினில் வெளியிட வேண்டும்.

    3] ஒருவர் நம் பதிவுப்பக்கம் வந்து கருத்துச் சொல்லிவிட்டார்
    என்ற ஒரே சந்தோஷத்தினால் மட்டும், நாம் அவர்கள்
    பதிவுகளுக்குப்போய் அவர்களின் அனைத்துக் குப்பைகளுக்கும்
    கருத்து அளித்து ஆதரவு அளிக்கக்கூடாது.

    4] முடிந்தவரை எழுத்துப்பிழை அதிகம் இல்லாமல் எழுதப்
    பழகிக்கொள்ள வேண்டும்.

    5] தாங்கள் பிறர் பதிவுகளுக்குச் சென்று கருத்திடும்போது,
    அவர்களும் நிச்சயமாக தங்கள் பதிவுகளுக்கு வருகை தந்து
    கருத்தளிக்க நினைப்பார்கள்.

    ஆனால் நான் [அவர்கள் என் பதிவுகள் பக்கம் வருகை தந்தாலும்
    கூட] பிறர் பதிவுகளுக்கெல்லாம் செல்வது கிடையாது.

    குறிப்பிட்ட 10 பதிவர்களின் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து,
    அவர்கள் பக்கம் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கென சில
    கொள்கைகள் வகுத்துக்கொண்டுள்ளேன்.

    போகப்போக தங்களுக்கே எல்லாம் தெரியவரும்.

    அன்புடன் VGK













    முதல் ஆளா நீங்க வந்து கருத்துச்சொல்லி என்னை உற்ஸாகப்படுத்தி இருக்கீங்க.எப்ப என்ன மிஸ்டேக் பண்ணுரேனோ வந்து சொல்லிக்கொடுங்க. நன்றி.



    ReplyDelete
  4. ரொWORD VERIFICATION என்பதை எப்படி நீக்க வேண்டும் என்பது பற்றி எனக்கும் இப்போது நினைவில் இல்லை. வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள்.
    ரொம்ப நன்றிங்க. வேர யாருகிட்ட கேட்டா சொல்லித்தருவங்க?

    ReplyDelete
  5. திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது.

    அவரின் கைபேசி எண்: 9944345233

    ReplyDelete
  6. ஓ கே நன்றி, அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. வலையுலகப் பிதாமகரின் முதல்
    வருகையும் ஆசியும் அறிவுரையும்
    கிடைக்கப்பெற்றது பாக்கியமே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வலையுலக வருகையையிட்டு என் வாழ்த்துக்கள் ஸ்ரீவத்சன்.

    ReplyDelete
  9. நன்றி ரமணி சார்

    ReplyDelete